Card image cap
மெய்ப்பொருளாகி இறைத்தன்மையுடன் கலந்த நிலையில் கர்மா இல்லை என்பது சரியா, இல்லையா?
14
1

குறள் 5:
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

எனது புரிதல்:

மாயையினால் உண்டாகும் கர்ம பலன்கள், எங்கும் வியாபித்திருக்கும் மெய்ப்பொருளாகி இறைத்தன்மையுடன் இரண்டறக் கலந்து பேரறிவாகி நின்ற நிலையில் அண்டாது.

இன்னொரு வகையில் விவரிப்பதாயின், கர்மா என்பது பிரதிபலிப்பதற்கு மாய இருளாகிய திரை ஒன்று தேவைப்படுகின்றது. திரை இல்லாவிடின் கர்மாவினால் பிரதிபலிக்க இயலாது. மாயத்திரை விலகிய நிலையிலேயே எங்கும் வியாபித்திருக்கும் மெய்ப்பொருளாகி இறைத்தன்மையுடன் இரண்டறக் கலந்து பேரறிவாகின்ற தன்மை உண்டாகும். ஆதலினால், இறைத்தன்மையுடன் கலந்த நிலையில் கர்மா என்பது இல்லை.

மேல்வரும் எனது புரிதலை நீங்கள் ஏற்றுக் கொள்கின்கிறீர்களா என்பதைப் பகிரவும்.

How do you vote?

Card image cap