Card image cap
வெற்றி அணி இங்கிலாந்தா அல்லது பிரான்ஸா?
25
3

கால்பந்து விளையாட்டு நுட்பக்கங்களைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. இருப்பினும், நான் நிச்சயமாக கால்பந்து உட்பட பல விளையாட்டுகளின் ரசிகை. தற்போது மிகவும் சுவாரஷ்யமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் கால்பந்து உலகக் கோப்பை 2022ன் வெற்றி அணி எதுவென கணிக்கும் நேரம் இது.

போட்டி முடிவுகள் எதிர்பாராத பல திருப்பங்களுடன் புரியாத புதிராக அனுமானங்களைக் கடந்து நடைபெறுகின்றது. சுயமான உங்கள் கணிப்பே எப்போதும் சரியாக இருக்கும் எனும் வழமையான நினைவூட்டலுடன் அடுத்து நடைபெறவிருக்கும் போட்டிகளின் கணிப்புகளுக்குச் செல்வோமா?

இங்கிலாந்து எதிர் பிரான்ஸ் போட்டியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகமாக உள்ளது?

இரண்டு அணிகளும் வலிமை வாய்ந்தவையே. இருப்பினும், இன்றளவும் உலக மக்களின் விருப்பு விளையாட்டாக விளங்கும் 1863 இல் வகுக்கப்பட்ட கால்பந்து விளையாட்டு விதிகளின் கர்த்தா இங்கிலாந்து கால்பந்து சங்கம் என்பதனால் இத்தகைய நேர்படுத்தப்பட்ட கால்பந்து விளையாட்டை அறிமுகம் செய்த இங்கிலாந்து அணியே வெற்றி வகை சூட வேண்டும் எனும் பன்னெடுங்கால அவா இம்முறை நிச்சயம் நிறைவேறும் என நம்புகின்றேன். சரி இனி, வெல்லப் போவது யார்? எனும் கேள்விக்கு இங்கிலாந்து எனும் எனது கணிப்பு சரியா இல்லையா என்பதை பகிரவும்.

How do you vote?

Card image cap